

தொழில் விவசாய முன்னேற்றக் கட்சி
நோக்கம் : தொழில், விவசாயம், தமிழ், தமிழர், தமிழக நலன் மற்றும் முன்னேற்றம்.
ஏன் இந்த கட்சி ?
நண்பர்களே ! தற்போது தமிழ்நாட்டிலும் ஏன் இந்திய அளவிலும் மொத்த மக்கள் தொகையில் தோராயமாக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 5 சதவீதம் மட்டுமே, ஆனால் 95% தொழில், வணிகம், விவசாய துறையினரும், நாம் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள். மொத்தத்தில் அரசாங்கத்திலிருந்து சம்பளம் பெறாத நாம் தான் பெரும்பான்மை."*தொழில்*" சிறந்தால்தான் தொழிலாளர்களும், தொழிலதிபர்களும் அவர்தம் குடும்பங்களும் வாழ முடியும் வளர முடியும், தொழில் வணிகம் மற்றும் விவசாயம் செழிப்பாக இருந்தால்தான் அது சார்ந்த நம் அனைவருக்கும் நலம், அதுதான் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பலம். பொருளாதாரத்தை ஏற்படுத்தக்கூடிய நாம் அரசியல்வாதிகளுக்கு, கட்சி துவக்க, அதை நடத்த, தேர்தலில் போட்டியிட நிதி வழங்கவும், ஆட்சி அமைத்த பின் வரி வசூல் செய்து தரவும் பயன்படுகிறோம்.ஆனால் நமக்கும் நாம் சார்ந்த நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களும், உரிய அங்கீகாரங்களும் கிடைப்பதில்லை. முரணாக நம்மை பாதிக்கும் அம்சங்கள் வெகுவாக உள்ளன. பல நிலைகளில், கோணங்களில் நாம் படும் இன்னல்களுக்கு அரசு மற்றும் அதிகார மையங்களை நோக்கி நவீன ஊடகம் தாங்கி தீர்வு பெற TVMK (தொழில் விவசாய முன்னேற்றக் கட்சி) உருவாக்கப்பட்டுள்ளது.நமக்காக குரல் கொடுக்க நமது தொழில் விவசாய முன்னேற்ற கட்சி "*வீட்டுக்கு ஒரு ஓட்டு*" என்ற இலக்குடன் உடன்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ, தனித்தோ தேர்தலில் போட்டியிட்டு நமக்கான பிரதிநிதியை சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் அனுப்பவேண்டும்.இதை வெற்றிகரமாக செயல்படுத்த எனக்கு தொழில் முனைவோர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இவை சார்ந்த சங்கங்களின் மேலான ஆதரவு தேவை.

கொள்கைகள் & நோக்கங்கள்
உறுப்பினர் உறுதி மொழி
-
தொழில், விவசாயம், தமிழ், தமிழர், தமிழக நலன் மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை முக்கிய நோக்கமாக கொண்ட தொழில் விவசாய முன்னேற்ற கட்சியின் கொள்கைகளில் முழு உடன் பாட்டுடன் செயல்பட்டு கட்சியின் நோக்கங்கள் நிறைவேற பாடுபடுவேன்.
-
இன்றும் என்றும் என்றென்றும் கட்சி கொண்ட கொள்கை மற்றும் நோக்கங்களில் பிடிப்புடன் சுயநலமற்று என் எண்ணத்தில் ஊனமின்றி நேர்மையுடன் செயல்படுவேன்.
-
எனக்கும் என் குடும்ப வாழ்வாதாரம் & அடிப்படை வசதிகளுக்கு வருமான ஏற்பாடு ஏற்கனவே உள்ளது. நானோ, எனது குடும்பத்தார், நண்பர்கள், சுற்றத்தார் மற்றும் உறவினர்கள் கட்சியின் பேரால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த பலனும் எதிர்பார்க்கவில்லை.
-
கட்சியில் பொதுநலத்தில் ஆத்ம திருப்திக்காகவே இணைந்து செயல்படுகிறேன், கட்சிக்கு நான் செலவிடும் பணம், நேரம், உழைப்பு உள்ளிட்ட பங்களிப்புகளுக்கு எந்த பிரதிபலன் மற்றும் அங்கீகாரமும் எதிர்பார்க்கவில்லை.
-
கட்சியில் அல்லது கட்சியால் பயன்பெற தற்போதோ, பிற்காலங்களிலோ, எனக்கோ, மற்றவருக்கோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பறித்துரைக்கவோ, வற்புறுத்தவோ மாட்டேன்.
அடுத்தடுத்த தொடர் தகவல்களை பெற
TVMK குழு வில் இணையவும்: 👇
https://chat.whatsapp.com/FUl49jKNCaR4fxbBytbl9w
JK MUTHU
WhatsApp : +91 93452 28184
Email : jkm@jkmuthu.com

















